நொடிப்பொழுதில் திசை மாறிய வாழ்க்கை... கணவர் கண்முன்னே துடிதுடித்து மனைவி பலி... வைரலாகும் வீடியோ!

 
ரேக்ளா மாடு

சாலையில் சென்று கொண்டிருந்த ரேக்ளா வண்டியில், திடீரென மிரண்டு ஓடிய மாடுகள் எதிரே வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், கணவன் கண்முன்னே, இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வந்த மனைவி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (32). இவரது மனைவி புவனேஸ்வரி (25). இவர்கள் இருவரும் வண்டிக்காரனூர் பிரிவு அருகே சாலையில் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு எதிரே ரேக்ளா வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், ரேக்ளா வண்டியில் கட்டப்பட்டிருந்த மாடுகள் திடீரென மிரண்டு திரும்பியதால், இவர்களது வாகனம் மாட்டுவண்டியின் மீது மோதியதில், நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பிரகாஷூம், அவரது மனைவி புவனேஸ்வரியும் கீழே விழுந்தனர். விதி விடாமல் துரத்தும் விதமாய் அதே சமயம், எதிர் சாலையில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் புவனேஸ்வரி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கல் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு விபத்து குறித்து தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

dead-body

ரேக்ளா வண்டி யார் ஓட்டி வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில்  தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web