தொடரும் பயங்கரம்!! மனைவி 9 துண்டுகளாக வெட்டி கொலை.!! கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

 
மாலோதி

பொதுவாகவே இந்தியா முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள போரியா மாவட்டத்தில் காட்டுப் பகுதியில் 9 துண்டுகளாக பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுதான் இந்த பரபரப்புக்கு காரணம்.

சட்கி என்ற கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் பெண்ணின் உடல் பாகங்களை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், அப்பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். மேலும், அதே இடத்தில் அந்த பெண்ணின் உடைகள், பைக் சாவியையும் கைப்பற்றினர்.அதைக்கொண்டு அடையாளம் காணப்பட்டதில் படுகொலை செய்யப்பட்ட பெண் அப்பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான மாலோதி சோரன் என்று கண்டறியப்பட்டது. பின்னர் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அம்பலமானது. உயிரிழந்த பெண்ணின் சகோதரி ராணி சோரேன் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மாலோதிக்கு தேலு என்ற நபருடன் பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

மாலோதி

இந்த தம்பதிக்கு இரு ஆண், ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாத காலமாகவே மாலோதியின் கணவர் தேலுவுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ள உறவு இருந்துள்ளது. இது மாலோதியின் கவனத்திற்கு வரவே அதை அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவர் தேலு மனைவியை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கடந்த மாதம் வீட்டில் இருந்து மாலோதி தனது தாய் வீட்டிற்கு சென்றபோது, தேலு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் மாலோதிக்கு தெரியவரவே, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தனது கணவர் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார்.

மாலோதி

அப்போது மாலோதி மாயமான நிலையில், பெண்ணின் வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் தான், கணவரால் மாலோதி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி உண்மை அம்பலமானது. தொடர்ந்து கணவர் தேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web