அடங்காமல் திரிந்த மனைவி... கணவன் செய்த பகீர் சம்பவம்... பரபரப்பு வாக்குமூலம்!

 
சிராவணி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜெகதம்பா பகுதியில் வசித்து வருபவர் சிராவணி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டூரை சேர்ந்தவரை  திருமணம் செய்து கொண்டார்.  கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை தொடங்கினர்.  ஆனால், திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்து தகராறு ஏற்பட்டது.  இதனால்  சிராவணி சில மாதங்கள் கோவாவில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, விசாகப்பட்டினத்தில் உள்ள  ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கோபாலகிருஷ்ணா என்ற இளைஞருடன் சிராவணிக்கு நட்பு ஏற்பட்டது. அசோக் கெலாட் கோபாலகிருஷ்ணா ஓவியர். பரவாடாவில் வசித்து வருபவர்.   இருவருமே நெருங்கி பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் தனியாக வீடு எடுத்து லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர்.

சிராவணி

இவர்களது வாழ்வும், சிலநாட்கள் மகிழ்ச்சியாகவே கழிந்தது. இப்படிப்பட்ட சூழலில், சிராவணியின் நடத்தை மீது திடீரென கோபால கிருஷ்ணாவுக்கு சந்தேகத்தை கொடுத்து உள்ளது. சிராவணி, மற்ற ஆண்களுடன் நெருங்கி பழகி வந்தது கோபாலகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும் தகராறுகள் வெடித்தன. இது குறித்து  பலமுறை கோபால கிருஷ்ணா கண்டித்தும்  சிராவணி ஆண் நண்பர்களிடம் பேசுவதை விடவில்லை. தொடர்ந்து அவர்களிடம் பழகி வந்ததாகவே கூறப்படுகிறது. அதில் முக்கியமான நபர் வெங்கி.  இவருடன் தான் சிரோமணி மிக நெருக்கமாக பேசி வந்தாராம். அதனால், இவரது பெயரை குறிப்பிட்டே, அவருடன் பழகக்கூடாது என  கோபாலகிருஷ்ணா பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இவை எதையுமே சிராவணி பொருட்படுத்தவில்லை.  வாட்ஸ் அப் மெசேஜ் மூலமாக வெங்கியுடன் பேச்சினை  தொடர்ந்துள்ளார்.  

சிராவணி

இதை பார்த்த கோபாலகிருஷ்ணா ஆத்திரம் அடைந்ததுடன், சிராவணியை கொலை செய்யவும் முடிவு செய்தார். அதன்படி, சிராவணியிடம், நைசாக பேசி விசாகப்பட்டினம் கடற்கரை ரோட்டிற்கு அழைத்து சென்றார்.கோகுல் பார்க் என்ற பகுதிக்கு நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இடத்திற்கு சென்றதுமே, வெங்கியுடன் பழகுவது குறித்து சிராவணியிடம்  பேசத் தொடங்கினார். இதனால்  மீண்டும் தகராறு தொடங்கியது.  ஒரு கட்டத்தில்  வெங்கியுடன் பழகுவதை நிறுத்த முடியாது எனக் கூறியுள்ளார். கோபாலகிருஷ்ணன் ஆத்திரத்தில்  அவரது கழுத்தை கொடூரமாக நெரித்தார்  இதில் சம்பவ இடத்திலேயே வாணி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனையடுத்து கோபாலகிருஷ்ணா, தானாகவே மகாராணி பேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.. தன்னை போலவே, வேறு ஆண்கள் சிரவாணியால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கணவன் என்ற முறையில் தானே  கொலை செய்துவிட்டதாக வாக்குமூலமும் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web