கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ... ஆஸ்கர் விருதுகளுக்கான படத்தேர்வுகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

 
காட்டுத்தீ
 

 

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் ஆஸ்கர் விருதுகளுக்கான படத்தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

97வது ஆஸ்கர் விருதுக்கான விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வழக்கமாக ஜனவரி 17ம் தேதி அறிவிக்கப்படவிருந்தது. கலிஃபோர்னியா காட்டு தீ விபத்தினால் ஜனவரி 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் அகாடமி சிஇஓ பில் க்ராமர், அகாடமி உறுப்பினர்களுக்கு இது குறித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த மின்னஞ்சலில், "தெற்கு கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எங்களது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது அகாடமி உறுப்பினர், உடன் வேலை செய்பவர்கள் பலர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் வசிக்கிறார்கள். நாங்கள் உங்களை நினைத்துக் கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா காட்டுத்தீ

ஜனவரி 14ம் தேதி வரை வாக்கெடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஜனவரி 8ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை கிட்டதட்ட 10,000 அகாடமி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.2025 ஆஸ்கர் அகாதமி விருதினை கோனோ ஓ'பிரைன் மார்ச் 2ம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் டால்பி திரையரங்கில் தொகுத்து வழங்கவிருக்கிறார். 

கடந்த புதன்கிழமை இரவு ஹாலிவுட் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரவியதாக அந்த பகுதிகளில் இருந்து சுமார் 1,00,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஹாலிவுட் பிரபலங்களான பில்லி கிரிஸ்டல், மண்டி மூர், பாரீஸ் ஹில்டன், கேரி எல்விஸ் தங்களது வீடுகளை இழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web