வனவிலங்கு வேட்டையாட சென்றவர் துப்பாக்கி சூட்டில் பலி... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

 
உமா

தேனி மாவட்டம் கூடலூர்  குள்ளப்பகவுண்டன்பட்டியில் வசித்து வருபவர்   ஈஸ்வரன். இவர்  மேகமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட  , தடை செய்யப்பட்ட வனப்பகுதியில்    வனவிலங்குகளை வேட்டையாட சென்றுள்ளார். அவருடைய வனவிலங்கு வேட்டையை தடுத்து நிறுத்த  முயன்ற வனத்துறையினரை ஈஸ்வரன் தாக்கியுள்ளார். இதனை கட்டுப்படுத்த  வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஈஸ்வரன்  கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உமா

இந்நிலையில்  ஈஸ்வரனின் உறவினர்கள் 2வது நாளாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உடலை வாங்க மறுத்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இது குறித்து உறவினர்கள் “ஈஸ்வரன் மீது துப்பாக்கி சூடு நடத்திய வனத்துறையினரை  உடனடியாக கைது செய்ய  வேண்டும்” எனக் கூறி  தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோட்டாட்சியர்   தலைமையில் காவல்துறையினர் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்ட பின்னரே  இறந்தவரின் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்படும்.  

உமா


ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய வனத்துறையினரை கைது செய்யும்வரை ஈஸ்வரனின் சடலத்தை வாங்கமாட்டோம் என்றும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய விடமாட்டோம் என உறவினர்கள் 50 பேர்   தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில்  காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web