24 குடும்பங்களுக்கு முதல்வர் ‘சாரி’ சொல்வாரா?! தவெக தலைவர் விஜய் முழு பேச்சு!

 
விஜய் தவெக

24 குடும்பங்களுக்கு முதல்வர் ‘சாரி’ சொல்வாரா? என்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று காலை தவெக சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கறுப்பு சட்டை அணிந்த நடிகர் விஜய் பங்கேற்றார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

விஜய்

கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற்று இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் காவல் மரணங்களுக்கு நீதி கோரி தவெக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். முதன்முறையாக போராட்டக்களத்திற்கு விஜய் வந்துள்ளதால் தவெக-வினர் குவிந்துள்ளனர். இந்த கூட்டத்தில் அரசுக்கு தனது எதிர்ப்பை காட்டும் வகையில் விஜய் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.

அப்போது "சாரி வேண்டாம்... நீதி வேண்டும்." என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழகத்தில் இந்த லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய விஜய், ""அஜித்குமார், சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர், அந்த குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, CM சார்... நீங்க Sorry சொன்னீங்க. தப்பில்ல. ஆனா இதே ஆட்சியில 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்காங்க, அவங்க குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்க. இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்க..

சாத்தான்குளம் வழக்கில் அன்று பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அவமானம் என்றார் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆனால் இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்குத் தான் மாற்றப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் அவமானம் என்றால் அஜித்குமார் கொலைக்கு என்ன பெயர்?

அஜித்

அதிகபட்சம் முதல்வரிடம் இருந்து சாரி தான் வருகிறது, நிர்வாகத் திறனற்று இருக்கிறது திமுக அரசு. திமுக மாடல் ஆட்சி, சாரிமா மாடல் ஆனது. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. சாத்தான்குளம் கொலை அவமானம் என்றால் அஜித்குமார் கொலை அவமானம் இல்லையா? அண்ணா பல்கலை, முதல் அஜித்குமார் விவகாரம் வரை நீதிமன்றம் தலையிட்டுள்ளது. நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டுமென்றால் பிறகு நீங்கள் எதற்கு முதல்-அமைச்சர்? உங்கள் ஆட்சி எதற்கு சார்?" என்று கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?