தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ஏற்பாரா இறையன்பு? பரபரக்கும் கோட்டை வட்டாரம்!

 
இறையன்பு

தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, இம்மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். 1988ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஓய்வுக்கு பிறகு மாணவர்களை ஊக்கப்படுத்தி உரையாற்றவும், புத்தகங்கள் எழுதவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.  எனவே தான் எந்த அரசு பதவியையும் பெற விரும்பவில்லை. மாநில தகவல் ஆணைய தலைமை கமிஷனர் பதவியை ஏற்கனவே மறுத்து விட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தலைமைச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவர் தமிழக அரசின் முதன்மை ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. 

இறையன்பு

முதல்வர் ஸ்டாலின் நிர்பந்தம் காரணமாக அந்த பதவியை அவர் ஏற்பாரா என்பது தெரியவில்லை. இறையன்பு ஓய்வு பெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அரசு அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது. இந்த பதவிக்கு 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த பட்டியலில் முதல் இடத்தில் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா உள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராக உள்ள இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வர் பழனிசாமியின் செயலராக இருந்தார். பொதுத்துறை செயலர் பதவியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அதன் பிறகு மத்திய அரசுப் பணிக்கு சென்றவர், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி மூப்பு பட்டியல் அடிப்படையில் ஹன்ஸ்ராஜ் வர்மா முதலிடத்தில் இருக்கிறார். 1989ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சேர்மனாக உள்ளார். அடுத்ததாக 1989ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் உள்ளார். இவர் வருவாய் நிர்வாக கமிஷனராக உள்ளார். இவர்களில் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்த ஆண்டு மே மாதமும், சிவ்தாஸ் மீனா அடுத்த ஆண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026 வரை பதவியில் இருப்பார். தலைமைச் செயலர் பதவிக்கு தகுதியானவர்களாக கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் 20க்கும் அதிகமான அதிகாரிகள் உள்ளனர்.

தமிழக அரசு

புதிய தலைமைச் செயலரை தேர்ந்தெடுப்பதற்கு பதவி மூப்பு சீனியாரிட்டி தேவையில்லை என்பது மரபு. முதல்வர் தனக்கு யார் வசதியானவர் என்று நினைக்கிறாரோ அவரை தேர்வு செய்ய முடியும். இந்நிலையில் இறையன்புவிற்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் ஆலோசகர் பதவியை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். என்ன நடக்கிறது என்று காத்திருப்போம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!

From around the web