காசாவில் போர் முடிவுக்கு வருமா? ஐநா தீர்மானம் தோல்வி!

 
காசா

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 ம் தேதி அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அத்துடன் 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. 

காசா

இதில் 60000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தற்போது வரை 80 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகருக்குள் தரை வழியாக ஊடுருவி முன்னேறி வருகிறது. 

காசா இஸ்ரேல்

இதையடுத்து அங்கு பதற்றம் அதிகரித்து இருப்பதால் பாலஸ்தீனியர்கள் காசா நகரை காலி செய்து கால்நடையாகவும், வாகனங்கள் மூலமாகவும் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், காசாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?