தமிழ் வழி பாடப்பிரிவு நீக்கம் வாபஸ்!! அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி!!

தமிழகத்தில் சிபிஎஸ்இ, மெட்ரிக் என எந்த வகை கல்வியாக இருந்தாலும் தமிழ் பாடப்பிரிவும் அதில் தேர்ச்சியும் அவசியம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக தமிழ் வழியில் உயர்கல்வி திட்டத்தின் கீழ் கல்லூரிகளிலும் தமிழ் வழியில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் பாடங்களில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின் 6 உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், எதிர்பார்த்தபடி மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. தூத்துக்குடி ராமநாதபுரத்தில் இயந்திரவியல் பிரிவில் ஆங்கில மொழியும் ,அரியலூரில் கட்டடவியல் பிரிவில் ஆங்கில வழியும் , பட்டுக்கோட்டை, திருக்குவளையில் இயந்திரவியல் , மின்னியல் மற்றும் மின்னணுவியல் பாடங்களின் ஆங்கில வழியும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது எனவும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுக்கும் குறைவான மாணவர்களில் தமிழ் மொழிக் கல்வியை தேர்வு செய்தனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது. 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நீக்கம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!