அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதா? வாய்ப்பே இல்லை.. தெளிவாக விளக்கிய ஜோ பைடன்!

 
பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது.இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஜோ பைடன் (81), குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் (வயது 78) தலைவர் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஜோ பைடன் இதில் சரியாக செயல்படவில்லை. பல இடங்களில் சிக்கிக் கொண்டார். இதன் காரணமாக அவர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வேண்டும் என அவரது சொந்த கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டிரம்ப் பைடன்

இதனால் ஜோபைடனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் ஜோ பைடனை விட துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகப் போவதில்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அவர் தனது நிதி திரட்டும் மின்னஞ்சலில் கூறியதாவது, நான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை வெளியே தள்ளவில்லை. நான் விலகவில்லை, இறுதிவரை இந்தப் போட்டியில் இருக்கிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். நவம்பரில் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க எனக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் உதவுங்கள்.

டிரம்ப் பைடன்

ஒரு தேசமாக, நாம் வீழ்த்தப்படும்போது, ​​மீண்டும் எழுவோம். நாங்கள் கடுமையாக உழைக்கின்றோம்.அதைத்தான் நான் மீண்டும் செய்யப் போகிறேன். 2020ல் டிரம்பை தோற்கடித்தோம். 2024ல் அவரை மீண்டும் தோற்கடிக்கப் போகிறோம். ஆனால் அது எளிதாக இருக்காது. அதைச் செய்ய எனக்குப் பின்னால் நீங்கள் உருதுணையாக இருக்க வேண்டும்   என்று கூறியதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன்-பியர் கூறினார். மேலும், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவது குறித்து ஜோபைடன்  பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web