வீடு புகுந்து பெண் கொடூர கொலை.. பதற வைத்த பக்கத்து வீட்டுக்காரரின் வாக்குமூலம்!

 
 ரேணுகா

கோவையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பக்கத்து வீட்டு வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்று கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

ரேணுகா

இந்நிலையில், வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்து ஏழு நிமிடத்தில் நபர் ஒருவர் வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் பக்கத்து வீட்டில் இருந்த சதீஷ் (34) என்பவர் நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சதீஷ், அதிக கடன் காரணமாக, நிதி நிறுவனத்தில் கார் கடன் வாங்கி, அதை செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அப்போது பக்கத்து வீட்டில் புகுந்து நகைகளை திருடிய போது சத்தம் போட்ட ரேணுகாவை, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் வெட்டியதாக வாக்குமூலம் அளித்தார். அவரிடம் இருந்து மூன்றரை பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் கொலையின் பின்னர் கொலையாளி தனது வீட்டிற்குச் சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டதாகவும், உறவினர்களுடன் எதுவும் தெரியாதது போல் ரேணுகா வீட்டில் நின்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web