காதலன் வீட்டின் எதிரில் பெண் போலீஸ் தீக்குளித்து உயிரிழப்பு!

 
பிரசாந்தி

காதலன் வீட்டின் எதிரே பெண் போலீஸ் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரில் மாநில அரசு போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. இங்கு பெண் போலீஸ்காரர் பிரசாந்தி  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவரும், புரோதட்டூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்த மார்வாடா கிராமத்தில் வசித்து வரும்  வாசுவும்  காதலித்து வந்தனர்.  

ஆம்புலன்ஸ்

கடந்த 6 மாதத்திற்கு முன் வாசு, வேலையை விட்டு விட்டு சென்றுவிட்டார். அதற்கு பிறகு பிரசாந்தியிடம் பேச வில்லையாம். இதனால் பிரசாந்தி  23ம் தேதி வாசுவை தேடி, அவரது கிராமத்திற்கு சென்றார்.அப்போது வாசுவுக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனது தெரியவந்தது.  அதிர்ச்சியடைந்த பிரசாந்தி, வாசுவிடம், 'என்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாமா?' எனக் கேட்டு தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

உத்தரபிரதேச போலீஸ்

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வாசுவின் வீட்டிற்கு சென்ற பிரசாந்தி தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பரவி அலறி துடித்த அவரை, பொதுமக்கள் மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  பிரசாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  வாசுவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?