நடிகை கங்கனாவை அறைந்த பெண் காவலர் பணியிட மாற்றம்!

 
கங்கனா

கடந்த மாதம் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை தாக்கியதாக, குற்றம் சாட்டப்பட்ட சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கடந்த மாதம் தில்லி செல்வதற்காக, சண்டீகர் விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் தன்னை அறைந்ததாகக் கூறி, தில்லியில் கங்கனா சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் புகார் அளித்திருந்தார்.

கங்கனா ரனாவத்

கங்கனா அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், கங்கனா முன்னொரு சமயத்தில் விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதால், அதிருப்தியடைந்திருந்தார். இதனால் தான் குல்விந்தர் கவுர், கங்கனாவை தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்தது.

நடிகை கங்கனா ரணாவத் முன்னிலை!

இதனைத் தொடர்ந்து, சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். குல்விந்தர் கவுரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது குல்விந்தர் கவுர் சண்டீகர் விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web