கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் வீரர் சஸ்பெண்ட்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

 
கங்கனா ரனாவத்

சண்டிகர் விமான நிலையத்தில்  பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் கண்ணத்தில் மத்திய பாதுகாப்புப் படை பெண் அதிகாரி  அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் இன்று சண்டிகர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு இருந்த துணை ராணுவப் படையான மத்திய தொழில் பாதுகாப்பு (சிஐஎஸ்எஃப்) பெண் வீரருக்கும், நடிகை கங்கனாவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

‘நாட்டின் மிக சக்தி வாய்ந்த பெண் நான்’: கங்கனா ரணாவத்

வாக்குவாதம் முற்றி நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கன்னத்தில் வீரர் அறைந்ததாக தகவல்கள் வெளியாகின.பஞ்சாபில் உள்ள சண்டிகர் விமான நிலையத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.  ரணாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் கான்ஸ்டபிளை மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் படை பணி நீக்கம் செய்துள்ளது.

போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று கங்கனா ரனாவத் என தெரிவித்ததாகவும், அதற்க்காக அப்பெண் அறைந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web