கருக்கலைப்பு செய்த பெண் திடீர் மரணம்... தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கருக்கலைப்பு சிகிச்சை மேற்கொண்ட பெண், திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலை சேர்ந்தவர் தாமஸ் ஸ்டீபன். இவர் சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பர புரத்தில் ஆரோக்கிய செல்வ பிரபா என்பவரை கடந்த 22 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். அதில் அவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆரோக்கிய செல்வ பிரபா மீண்டும் கர்ப்பமானதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆரோக்கிய செல்வ பிரபா, நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 18ஆம் தேதி கருக்கலைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் ஆரோக்கிய செல்வ பிரபாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மேலும் உடல்நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் மருத்துவமனையில் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
