எந்திரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு!

 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் பகுதியில் கிரசர் இயந்தித்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் கிரசர் எந்திரம் மூலம் சீனி அவரைக்காய் செடிகளை பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருளாயியின் சேலை எந்திரத்தில் சிக்கியது.

பள்ளி மானவி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் அருகே உள்ள ரெகுராமபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி இருளாயி (65). இவர்களுக்கு குழந்தையில்லை. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கருப்பசாமி இறந்து விட்ட நிலையில், இருளாயி அதே பகுதியில் உள்ள பால்ராஜ் மகன் கார்த்திக்(35) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று அந்த தோட்டத்தில் வௌவால்தொத்தி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மேகலிங்கம்(50) என்பவருக்கு சொந்தமான கிரசர் எந்திரம் மூலம் சீனவரைக்காய் செடிகளை பிடுங்கும் பணி நடந்துள்ளது. அப்போது வேலை பார்த்து கொண்டிருந்த இருளாயியின் சேலை எந்திரத்தில் சிக்கியது. அதில் அவரது உடல் பல துண்டுகளாக சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த பிள்ளைகள்! விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

இது குறித்து தகவல் அறிந்து சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடல் பாகங்களை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?