கூட்டநெரிசலில் பெண் பலி.. குவியும் பக்தர்கள்... சபரிமலைக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை!

 
சபரிமலை சபரிமலை

சபரிமலையில் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை மாத சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலை பலி

சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீசார் திணறி வருகின்றனர். நேற்று நண்பகல் வரையிலான 43 மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் 18-ம் படியில் நீண்ட நேரம் நிற்காமல் உடனே தரிசனம் முடித்து திரும்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை கூட்டம்

இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு சபரிமலைக்கு விரைந்துள்ளது. பம்பை, சபரிமலை சன்னிதானத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு இருப்பார்கள் என கூறப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளவும் பேரிடர் மீட்பு படையினர் உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டு கேட்டுக் கொண்டதன் பேரில் அரக்கோணத்தில் இருந்து மீட்புக்குழு சென்றுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!