பேரூராட்சி பெண் ஊழியரின் கணவர் குளத்தில் சடலமாக மீட்பு!

 
சடலமாக

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள சிறிய பேரூராட்சி வில்லுக்குறி பேரூராட்சி. இங்கு பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் 31 வயதாகும் ஜீவா.  இவருடைய கணவர் ஜோசப் ஜெயசிங்.  38 வயதாகும்  இவர்களுடைய சொந்த ஊர் அஞ்சுகிராமம்  . ஜீவா பில் கலெக்டராக பணிபுரிவதால் இந்தப்பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.  

ஆகஸ்ட் 2ம் தேதி  ஜீவா ஈரோடு மாவட்டம் பவானிசாகருக்கு வேலை காரணமாக சென்றுள்ளார். அங்கு சென்றவர் கணவருக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் போனை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.  இதையடுத்து ஜீவா தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.  உறவினர் வீட்டிற்கு வந்தபோது கதவுகள் திறந்த நிலையில் கிடந்ததாக தெரிகிறது.  அங்கு ஜோசப் ஜெயசிங் இல்லை என  ஜீவாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஜீவா லீவு வாங்கி கொண்டு ஊருக்கு வந்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

சுங்கான்கடை அருகே உள்ள ஐக்கியான்குளம் அருகே ஒரு இருசக்கர வாகனம் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நின்றது. அந்த வண்டி  ஜோசப் ஜெயசிங்கினுடையது.  இதையடுத்து போலீசார், அந்த குளத்தை சுற்றி தேடினர். அப்போது குளத்திற்குள் ஒரு ஆண் பிணம் மிதப்பதை கண்டு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

தீயணைப்பு வீரர்கள்  குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குளத்தில் சடலமாக  மிதந்தது ஜீவாவின் கணவர் ஜோசப் ஜெயசிங் என்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து ஜோசப், ஜெயசிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?