தலைக்கேறிய போதையில் மட்டையான தாய் !! பசிக்கு கதறும் குழந்தைகள்!!

 
செவிலியர்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே 2 வயது பெண் குழந்தையும், 6 மாத ஆண் குழந்தையும் நீண்ட நேரம் அழுதுக்கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் அருகே ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அந்த குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்தனர். 

இதனை பார்த்த மக்கள் அளித்த தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தைகளுக்கு போலீசார் பால் வாங்கிக் கொடுத்தனர். இதையடுத்து அந்த பெண் ஏன் மயக்க நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள 108 ஆம்புலன்ஸுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

செவிலியர்

அப்போது அதிலிருந்த ஒரு செவிலியர் வந்து அந்த பெண்ணை எழுப்பிய போது அதிர்ச்சி காத்திருந்தது. அந்தபெண், தலைக்கேறிய போதையால் படுத்து கிடந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த பெண், இரு குழந்தைகளின் தாய் என்பது தெரியவந்ததது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் மெரினாவில் வந்து தங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம். 

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரையும் குழந்தைகளையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் அவர்கள் மூவரும் காப்பகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

செவிலியர்

கைக்குழந்தைகளுடன் பெண் தவிக்கிறாரே என பலரும் மனம் இறங்கி யாசகம் அளிக்கின்றனர். ஆனால் அந்த பணத்தில் பெண் இப்படி குடித்து மட்டையாகி விட்டு குழந்தைகளை பட்டினி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்பகத்தில் சேர்ப்பதோடு பெண், குழந்தைகளுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web