அதிகாலையில் அதிர்ச்சி... தீ மிதி திருவிழாவில் தவறி குண்டத்தில் விழுந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

 
தவமணி
 

இன்று அதிகாலை கும்பகோணம் அருகே பந்தநல்லூரி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்ட நிலையில், தீ மிதித்த பெண்மணி ஒருவர், தவறி குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தவமணி
இன்று அதிகாலை கும்பகோணம் அருகே பந்தநல்லூர் மாரியம்மன் கோயிலில் நடைப்பெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு தீயணைப்பு துறையினர், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது தவமணி எனும் பெண் குண்டத்தில் இறங்கினார்.

ஆம்புலன்ஸ்
அனல் அதிகளவில் இருந்த நிலையில், கடும் வெப்பம் காரணமாக அவர் திடீரென குண்டத்திலேயே தவறி விழுந்தார். உடனடியாக பாதுகாப்பிற்கு நின்றிருந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டு உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டம் திருவிழாவில் பங்கேற்று, தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web