15 சவரன் நகைகள், ரூ.18 லட்சம் பணத்துடன் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு மனைவி எஸ்கேப்!

 
நிஷா

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் வசித்து வருபவர் விபின். இவருடைய மனைவி நிஷா. இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து  திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த  சில காலமாக விபின் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடனை அடைக்க அவர் தனது வீட்டை விற்று ரூ 18 லட்சத்தை வாங்கி, வந்து, அதை தனது மனைவி நிஷாவிடம் கொடுத்து வைத்திருந்தார்.  

நிஷா

விபின்,  வழக்கம் போல் சென்னைக்கு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிய நிஷா பின்னர் வீடு திரும்பவே இல்லை. இதையடுத்து அவருடைய உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.அலறி அடித்து பணியிடத்தில் இருந்து விபின் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். வீட்டில் வந்து பார்த்த போது அவருக்கு அதை விட பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடனை அடைப்பதற்காக நிஷாவிடம் கொடுத்து வைத்திருந்த ரூ 18 லட்சம் ரொக்கப் பணத்தையும், 15 சவரன் தங்க நகைகளையும் நிஷா எடுத்துக் கொண்டு மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

திருடி

விபின் போலீஸில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிஷாவை போலீசார் தேடி வருகின்றனர். நிஷா கள்ளக்காதலுக்காக கணவரையும் குழந்தைகளையும் அப்படியே பரிதவிக்க விட்டுவிட்டு  வேறு யாருடனாவது சென்று விட்டாரா அல்லது அவர் வெளியேறியதை கண்டு கொண்ட திருடர்கள் யாரேனும் வீடு புகுந்து பணம், நகைகளை திருடிவிட்டனரா எனப் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!