பெண் தலைமை காவலரின் கணவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி!

 
அரிவாள் வெட்டு வன்முறை க்ரைம்


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பெண் தலைமை காவலரின் கணவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜேசுராஜ் (47). இவர் டிராக்டர் மூலம் அந்த பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானத் தொழிலுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

தாக்குதல் குற்றம் க்ரைம்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜேசுராஜ் தனது டிராக்டரை கீழவாசல் பகுதியிலுள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை அருகே வழக்கம்போல் நிறுத்திவிட்டு, சற்று தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் காவல் நிலையம் அருகே அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி, அவரிடமிருந்த செல்போனை பயன்படுத்தி ஜி.பே.மூலம் ரூ.2,300 பணத்தை பறித்ததுடன், அவரது செல்போனையும் பிடுங்கி, உடைத்து எறிந்து விட்டு மிரட்டல் விடுத்து அங்கிருந்துச் சென்றுள்ளனர்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

ஜேசுராஜ் ரத்த காயங்களுடன் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினர் அவருக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னா் கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?