சாப்பாட்டில் மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவி... பகீர் வாக்குமூலம்!

 
தூக்கமாத்திரை

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியில் மொண்டி கொல்ல தெருவில் வசித்து வருபவர்  நல்லி ராஜூ(27). இவருடைய மனைவி மவுனிகா. திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 2 மகன்கள்.  இந் நிலையில் மவுனிகாவிற்கு அதே ஊரை சேர்ந்த குண்டு உதயகுமாருடன்  கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த கணவர் நல்லி ராஜூ கள்ளக்காதலை கைவிடும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். மவுனிகா இதனை கண்டுகொள்ளவே இல்லை. ஒருகட்டத்தில் நல்லி ராஜூவை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் உதயகுமாரை திருமணம் செய்து அவருடன் சேர்ந்து உல்லாசமாக வாழ முடிவு செய்தார். 

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

அதன்படி ஆகஸ்ட் 5ம் தேதி  மவுனிகா வீட்டில் தான் சமைத்த உணவில் தனது கணவருக்கு தெரியாமல் 10 தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்தார். கணவர் நல்லி ராஜூவுக்கு தூக்கம் வரவே அவர் அறைக்கு தூங்கிவிட்டார்.  நண்பர் மல்லிகார்ஜுனுடன் வீட்டுக்கு வந்த உதயகுமார், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து அமுத்தி மூச்சு திணறவைத்து கொலை செய்ததாக தெரிகிறது.  ராஜுவின் உடலை உதயகுமாரும், மல்லிகார்ஜூனும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் சடலத்தை  வீசி விட்டு சென்று விட்டனர்.  வெளியே சென்ற தனது கணவர் நல்லி ராஜூ வீடு திரும்ப வரவில்லை என்று மவுனிகா தனது உறவினர்களுக்கு தகவல் அளித்தார். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

ஆகஸ்ட் 6ம் தேதி  காலை சடலம்  கிடப்பதை கண்டு   போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில்  மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றுடன் உதயகுமார் சுற்றி திரிவது பதிவாகி இருந்தது தெரியவந்தது.இதன் பேரில்  உதயகுமார் மற்றும் மவுனிகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவர் நல்லி ராஜூவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?