பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உடலுறவு.. சைக்கோ ஆட்டோ ஓட்டுநர் கைது!
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொன்று பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் சையத் சுகேல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 24ம் தேதி இரவு சையது சுகேல் ஆட்டோவில் மார்க்கெட் பகுதிக்கு சென்றார். மனவளர்ச்சி குன்றிய பெண் அந்த வழியாக நடந்து சென்றபோது, சையத் சுகேல் லிப்ட் தருவதாக கூறி அழைத்துச் சென்றார். அப்போது பள்ளிக்கர பாளையா நோக்கி ஆட்டோ செல்லாமல், தேசிய நெடுஞ்சாலையை நோக்கி சென்றது.

இதை கவனித்த அந்த பெண் அவரிடம் வாக்குவாதம் செய்து ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். அப்போது சையத் சுகேல் ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் தலை மற்றும் காதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் சையத் சுகேல் அந்த பெண்ணின் உடலை ஆட்டோவில் ஏற்றி ஹைதாரிக்கு கொண்டு சென்றார். அங்கு பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்து சையத் சுகேல் தனது வக்கிர புத்தியைக் காட்டியுள்ளார்.

அதன்பின், சடலத்தை சாலையோரம் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பள்ளிக்கர பாளையா பகுதியைச் சேர்ந்த 50 வயது மனவளர்ச்சி குன்றிய பெண் என்பது தெரியவந்தது. . இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிக்பள்ளாப்பூரில் பதுங்கியிருந்த சையத் சுகேல் என்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
