பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம்.. இளைஞருக்கு போதை தெளியும் வரை வெளுத்து வாங்கிய பி.டி டீச்சர்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரியா லஸ்கர் என்ற உடற்கல்வி ஆசிரியர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, பஸ்சில் போதையில் பயணித்த வாலிபர் ஒருவர் பிரியா லஸ்கரை கையால் தொட்டு சில்மிஷம் செய்தார். இதை பிரியா கவனிக்காத நிலையில், குடிபோதையில் இருந்த வாலிபர் மீண்டும் அவர் மீது கையை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
Pune Woman Slaps Drunk Man 25 times for Allegedly harrasing Her inside Bus
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 19, 2024
pic.twitter.com/S5kMNynJYf
இதனால் ஆத்திரமடைந்த பிரியா, இளைஞரின் சட்டையை இறுக்கமாக பிடித்து, பலமுறை கண்ணத்தில் அறைந்தார். அவள் தனது இடது மற்றும் வலது கை என மாறி மாறி, அந்த இளைஜனுக்கு போதை தெளியும் வரும் வரை 20 முறைக்கு மேல் அடித்தாள். பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டிக்க வேண்டிய நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் அவர்களின் செயலற்ற தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து குடிபோதையில் இருந்த இளைஞரை போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை எதிர்கொண்டு துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!