சென்னை விமானத்தில் உறக்கத்தில் இருந்த பெண்ணிடம் இளைஞர் சில்மிஷம்!
டெல்லியில் இருந்து சென்னை வந்துக் கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த சக பெண் பயணியை தகாத முறையில் தொட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில் 43 வயதான ராஜேஷ் சர்மா பாலியல் துன்புறுத்தலுக்காக கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமான ஊழியர்களின் உதவியுடன் அந்த பெண் போலீசில் ராஜேஷ் சர்மா மீது புகார் அளித்தார்.
விமான பயணத்தின் போது, தான் தூங்கிக் கொண்டிருந்த போது பின்னால் அமர்ந்திருந்த நபர் தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்தப் பெண் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து விமான நிலையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராஜேஷ் சர்மாவும், அந்த பெண்ணும் ஜன்னல் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அந்த பெண் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், தூங்கிக் கொண்டிருந்த போது, அவளுக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேஷ் சர்மா, அவளைத் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தியதாக புகார் பதிவு செய்துள்ளார்" என்று அதிகாரி கூறினார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராஜேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் இன்னும் முறையான அறிக்கையை வெளியிடவில்லை.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
