தவெக நிர்வாகி லிப்ட் கொடுப்பது போல் நாடகமாடி மூதாட்டியிடம் செயின் பறிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வசித்து வருபவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கௌதம். இவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் ஆரணி அருகே ஒரு மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த வயதான மூதாட்டியை வண்டியில் ஏற்றுவது போல் கௌதம் நாடகமாடி அவரிடம் இருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் அவர்கள் வழக்கு பதிவு செய்து கௌதமை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடன் சுமை காரணமாக இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
