பகீர்... சிக்கனுடன் மயோனைஸ் சாப்பிட்ட பெண் பலி...187 பேர் மருத்துவமனையில் அனுமதி!
உணவே நஞ்சாகி அதனால் உயிரிழப்புக்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கேரள மாநிலம் திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சூர் மூனுபீடிகாவில் உணவகம் ஒன்றில் மயோனைஸ் உடன் குழிமந்தியை சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 187 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சூர் மாவடட்த்தில் மூணுபீடிகையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதுகுறித்து, ஆய்வு நடத்திய அதிகாரிகள் ஹோட்டலில் பரிமாறப்பட்ட மயோனைஸ் தான் இதற்கு காரணம் என உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உணவக நிர்வாகத்திடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
