விக்கிரவாண்டியில் பரபரப்பு... வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து!

 
கனிமொழி

 தமிழகத்தில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில்  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது  வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.

விக்கிரவாண்டி

அதன்படி 49 வயதான  கனிமொழி  வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.  அப்போது அவருடைய முன்னாள் கணவர் 52 வயதான ஏழுமலை வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கனிமொழியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு!

அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துவிட்டனர். இதைத்தொடர்ந்து கனிமொழிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.  கனிமொழிக்கு  கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web