கிணற்றில் பெண் சடலம் மீட்பு... போலீசார் விசாரணை!
ஸ்ரீவைகுண்டம் அருகே, 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே முல்லன்விளை கிராமத்தில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக சாயர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சென்று கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர்.

அந்த பெண்ணிற்கு சுமார் 45 வயது இருக்கும். நீண்ட நாட்கள் கிணற்றில் கிடந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டார என பல்வேறு கோணங்களில் சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
