பெண் மனசு... ப்ரோபோஸ் செய்த காதலன்.. காதலி செய்த வேலையைப் பாருங்க... ட்ரெண்டிங் வீடியோ!

 
ப்ரொபோஸ் காதல்

பெண் மனசு ஆழமுன்னு தெரியும்.. என்கிற வரியை உலகம் முழுக்கவே நிரூபித்து வருகிறார்கள். தன்னுடைய நீண்ட நாள் சிநேகிதி, காதலியாக மலர்கிற தருணம் என்று வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து, காதலர்களுக்கான பாரிஸ் நகரின் பிரத்யேகமான இடத்தில் வைத்து இளைஞர் ஒருவர்ன், முழங்காலிட்டு இறங்கி தனது காதலைச் சொன்னதும், அவனது காதலி ஓடிப்போன போது பெரும் அதிர்ச்சியடைந்தார். இளைஞனின் தோல்வியுற்ற ப்ரோபோஸலின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞனுக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர். வீடியோவில், ஒரு இளைஞர், சிவப்பு நிற உடையை அணிந்து, பாரிஸின் புகழ்மிக்க காதலர்களின் சுற்றுலா தலத்தில் தனது காதலியின் முன்பாக மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார்.

அப்போது அவரது காதலி, தனது செல்போனில் படம் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார். சுற்றி அமர்ந்திருக்கிற காதலர்கள் இந்த தருணத்தை அத்தனை மகிழ்ச்சியாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் யாரும் எதிர்பார்க்காத அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவள் தன் காதலனை முழங்காலில் கீழே பார்த்த போது, ​​திடீரென அதிர்ச்சியில் ஏதும் பேசாமல் திகைத்து நின்றாள்.

காதலனை முறைத்த பின் சில நொடிகளில் அங்கு இருந்து அவள் ஓடிவிட்டாள். அப்பகுதியில் திரண்டிருந்த கூட்டம் அதிர்ச்சியில் நிற்க, இரண்டு சுற்றுலாப் பயணிகள் அழத் தொடங்கிய காதலனிடம் ஓடி வந்தனர். சோகமான அந்த இளைஞனை ஊக்குவிக்க கூட்டத்தில் இருந்த மக்கள்  கைதட்ட ஆரம்பித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web