இன்று பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்கம்!

 
உலகக்கோப்பை

 அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் 9வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.  அக்டோபர் 20ம் தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.  ‘ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா

 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம்,  ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். நாக்-அவுட் சுற்றில் இருந்து மாற்று நாள் உண்டு. ஏற்கனவே உலகக் கோப்பையை பெற்றுள்ள  ஆஸ்திரேலிய அணிக்கே இந்த முறையும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.  வங்காளதேச பயிற்சியாளர் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அதிகபட்சமாக 2020-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

முந்தைய உலகக் கோப்பையில் அரைஇறுதி வரை  வந்து தோற்றது. இதுவரை எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்தமுறை இறுதிப்போட்டியில் வெல்வோம் என சூளுரைத்துள்ளது.  இந்திய அணி தனது தொடக்க லீக்கில் நாளை இரவு 7.30 மணிக்கு நியூசிலாந்தை துபாயில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் முதல் நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!