“பெண்களுக்கு பாதுகாப்பில்லை... ஷாலினியின் குடும்பத்தாருக்கு ரூ.25 இழப்பீடு தரணும்”.. அன்புமணி ராமதாஸ்!
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி ஷாலினி மீது முனிராஜ் கொடூர தாக்குதல் நடத்தி கத்தியால் குத்திக் கொலைச் செய்த சம்பவத்தைக் கண்டித்த அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், சேராங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் எனும் இளைஞர் ஷாலினியைக் காதலிப்பதாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், முனிராஜின் காதலை ஷாலினி ஏற்க மறுத்த நிலையில், பள்ளிக்குச் செல்லும் வழியில் ஷாலினியைக் கத்தியால் குத்தி, கொலை செய்துள்ளார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ், “பள்ளிக்கு செல்லும் மாணவிகள், அலுவலகப் பெண்கள், பொதுமக்கள் போன்றோருக்கான காவல்துறை பாதுகாப்பு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் பாதுகாப்பான சூழல் இருந்தால், ஏன் பொது மக்களுக்கு பாதுகாப்பில்லை” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள் (கோமன் பாதுகாப்பு திட்டம் போன்றவை) விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதே சமயம் மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், முனிராஜின் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
