4 வயதில் FIDE “Women Candidate Master” பட்டத்தை பெற்ற சிறுமி… உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

 
சர்வாணிகா


 தமிழகத்தில் விளையாட்டு திறனை மாணவ, மாணவர்களிடையே ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் விளையாட்டு துறை வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறது. அந்த வகையில் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு #FIDE”Women Candidate Master” என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே #FIDE”Women Candidate Master”   பட்டத்தை  சர்வாணிகா பெற்றுள்ளார்.

இவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர். இந்த சிறுமியை  ஊக்குவிக்கும் வகையில்  அவருக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய வலைதளத்தில் 4 வயது முதலே சர்வாணிகா செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். இவர் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளி என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தன்னுடைய  எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்வாணிகா

பல்வேறு சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்துள்ள தங்கை சர்வாணிகா, இப்போது புள்ளிகளின் அடிப்படையில் இந்த புதிய சாதனையை எட்டி, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவர் இன்னும் பல உயரங்களை தொட நம் திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web