7 முதல் 70 வயது வரை கும்மி பாட்டு பாடி நடனமாடிய பெண்கள்!!

 
கும்மி

கும்மி , கோலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, நாடகங்கள்  என நாட்டுப்புறக்கலைகள்  கொஞ்சம் , கொஞ்சமாக வழக்கொழிந்து  வருகின்றன. முன்பெல்லாம் கோவில் திருவிழாக்கள், வீட்டு விசேஷங்களில் இவை நிகழ்த்தப்படுவதுண்டு. தமிழக கோவில்கள் திருவிழாவிற்கு இப்போதெல்லாம் கேரளாவிலிருந்து செண்டை மேளத்தை வரவழைத்து விடுகின்றனர்.  இதனை படிப்படியாக மீட்டெடுக்கும் வகையில்  ஆங்காங்கே சில குழுக்கள் இன்னமும் போராடி வருகின்றன.

திருச்செந்தூர் முருகன்

அந்த வகையில்   ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்குநாடு கலைக்குழு சார்பில், வள்ளி அம்பாள் வரலாறு மற்றும் வள்ளி-முருகன் திருமணம் குறித்து ஒவ்வொரு ஆண்டு ம் ஏதேனும் ஒரு முருகன் கோவிலில் கும்மிப்பாட்டு பாடியவாறு நடனமாடி வழிபாடு செய்வது வழக்கம்.  நடப்பாண்டில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் சீருடையில் நடனமாடியது காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆசிரியை தமிழச்சி தாரணி தலைமையில், வள்ளி-முருகன் திருமணம் குறித்து கும்மிப்பாட்டு பாடி நடனமாடி வழிபட்டனர்.

திருச்செந்தூர்

 இதில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வசித்து வரும்   7 வயது சிறுமி முதல் 70 வயது பாட்டி வரை   300 பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு   கும்மிப்பாட்டு பாடி நடனமாடி வழிபட்டனர். அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை அணிந்து வந்தனர். ஒரே  மாதிரி  கும்மிப்பாட்டு பாடி நடனமாடியதை ஏராளமான   பக்தர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.  இதுகுறித்து கொங்குநாடு கலைக்குழுவினர் கூறுகையில், '' பெண்கள் கும்மிப்பாட்டு பாடி நாட்டியம் ஆடுவதால் மன அழுத்தம் நீங்கி, உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்று தன்னம்பிக்கை ஏற்படுகிறது''  எனத்  தெரிவித்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web