பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை... கதறும் 4 வயது மகள்...!!

 
சத்யா

புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரில் வசித்து வருபவர்   வினோத். இவர்  மின்துறை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்யா . இவர்   புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக  ஊர்க்காவல் படை காவலராக பணிபுரிந்து  வந்தார்.  சமீபத்தில்    இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸாக நியமிக்கப்பட்டார்.   இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

தற்கொலை
சமீபகாலமாக கணவன் மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டை, வாக்குவாதம், தகராறு எனத்தொடர்ந்து வந்தது.   இதனால் வினோத் திருபுவனையில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தீபாவளியான நேற்று முன்தினம் காலை சத்யா குழந்தையை திருபுவனையில் உள்ள கணவர் வீட்டில் விட்டுவிட்டு திரும்பி தனது வீட்டுக்கு வந்தார்.

ஆம்புலன்ஸ்

காலையில் வெகுநேரம் கழித்து வீடு திறக்கப்படாததால்  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்  இதுகுறித்து  போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது சத்யா தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.  அவரது உடலை மீட்ட போலீஸார்  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web