டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே பாறைக்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் வட வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடை முன்பு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடையை துவங்கும் போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மதுக்கடை அருகே பஸ் ஸ்டாப் உள்ளது. மாணவ, மாணவிகள் அந்த வழியே செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த பகுதி மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!