செம... தீபாவளிக்கு முன்பே மகளிர் உரிமைத் தொகை... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை செயல்படுத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்ஹில் 15ம் தேதி ஞாயிற்றுகிழமையாக இருந்ததால் 14ம் தேதியே குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. நவம்பரை பொறுத்தவரை நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகளிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கருத்தில் முன்கூட்டியே பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 9 அல்லது 10ம் தேதிக்குள் வங்கிகளில் பணம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!