அலறியடித்து ஓடிய பெண்கள்... குற்றாலத்தில் அருவியில் அடித்து வந்த உடும்பு!

 
உடும்பு

குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டம் திடீரென அலறியடித்தப்படியே ஓடினார்கள். அருவியில் பெரிய உடும்பு ஒன்று அடித்து வந்ததில் அந்த இடமே பரபரப்பானது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த  மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து  குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், அருவிகளில் ஆனந்தக் குளியல் போட்டு வருகின்றனர். 

உடும்பு

இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பல பெண்கள் வரிசையில் நின்று குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு ஒன்று திடீரென பெண்கள் குளிக்கும் பகுதியில் ’தொப்’ என விழுந்தது. இதைக்கண்டு அங்கிருந்த பெண்கள் பயந்துபோய் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

 உடும்பு

தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர், உடும்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த உடும்பை வனத்துறையினர் வனப்பகுதியில் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருவியில் விழுந்த உடும்பைக் கண்டு பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த காட்சிகளால்  குற்றாலத்தில்   சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது