மகளிர் ஆசிய கோப்பை.. முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை அணி!

 
ஆசியக் கோப்பை மகளிர் இறுதிப் போட்டி

ஆசியக் கோப்பை மகளிர் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதின. தம்புள்ளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார். மற்ற வீரர்கள் ரன் குவிக்கத் தவறியதால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிச்சர்ட் கோஷ் 14 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. கேப்டன் சாமரி அத்தபட்டு 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

ஹர்ஷித சமரவிக்ரம 51 பந்துகளில் 69 ரன்கள் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக இலங்கை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்து கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web