மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி... இந்தியா தொடர்ந்து 4வது வெற்றி! குவியும் வாழ்த்துகள்!

 
கண்ணீர் வேண்டாம்… பெருமிதம் கொள்வோம் ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பா.ம.க. சார்பில் ரூ.10 லட்சம் பரிசு – டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

ஒரு பக்கம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியே காணாது, தொடர்ந்து வெற்றி நடைப் போட்டு வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இன்னொரு புறம்,  இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் வெற்றிவாகை சூடியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் தொடர்ந்து ஹாட்சிக் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ள நிலையில், ஜப்பானுக்கு எதிரான போட்டியிலும் வென்று, தங்களது 4வது வெற்றியைப் பதிவு செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் சீனாவுடனான போட்டியில், சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை இந்திய படைத்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஹாக்கி தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா மகளிர் ஹாக்கி அணிகள் மோதின. இதில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இதில், இந்தியா சார்பில் தீபிகா, சலிமா டெடே ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்திய மகளிர் ஹாக்கி

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து நடப்பு சாம்பியனான ஜப்பானை நேற்றிரவு எதிர்கொண்டது. இந்தப் போட்டியிலும் வென்று, 4வது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி. பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web