பெண்ணின் நிர்வாணம் ஆபாசம் அல்ல.. ரஹனா வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
ரஹனா பாத்திமா

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ரஹனா பாத்திமா, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துவந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருமுடிக் கட்டுடன் சபரிமலைக்கு செல்ல முயன்றார். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் திரும்பினார்.

ஆனால், அவர் இருமுடிக் கட்டி கோவிலுக்கு சென்றதாக புகைப்படங்கள் வைரலானது. இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, மிரட்டல் வரத்தொடங்கியது. இதைத் தொடர்ந்து மத நம்பிக்கைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

ரஹனா பாத்திமா

அதோடு அரசு பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் ரஹனா பாத்திமா நிர்வாண நின்று, தன்னுடைய குழந்தைகள் மூலம் ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாகி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ மற்றும் ஐடி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவுசர் அதிரடிய தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில், ஆண்கள் சட்டை அணியாமல் சென்றால் அதை ஆபாசம் அல்லது கண்ணிய குறைவாக இந்த சமூகம் பார்ப்பதில்லை. இந்த கண்ணோட்டம் பெண்கள் அப்படி இருந்தால் கவர்ச்சி, ஆபாசமாக கருதப்படுகிறது. பெண்களின் நிர்வாணம் எப்போதுமே கவர்ச்சி, ஆபாசம் ஆகாது. ஒழுக்கக்கேடாகவும் கண்ணியகுறைவாகவும் அதை கருதக்கூடாது. பெண்கள் தங்கள் உடல் மீது உரிமை கொண்டாடும்போது அவர்கள் அடக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்.

ரஹனா பாத்திமா

நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு. ஒரு தாயின் அரை நிர்வாண மேல் உடம்பில் அவரது குழந்தைகள் கலைப்படைப்புக்காக வர்ணம் தீட்டுவது பாலியல் செயலை தூண்டுவது கிடையாது. இதில், குழந்தைகள் பாலியல் விஷயத்துக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என கூற முடியாது. அந்த வீடியோவில் பாலியல் சார்ந்த எந்த விஷயங்களும் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின்படி பெண்கள் தங்களுடைய சொந்த உடல் தொடர்பாக முடிவு எடுக்க அடிப்படை உரிமை உள்ளது. எனவே ரஹனா பாத்திமா மீதான வழக்குகளை ரத்து செய்கிறேன், என தீர்ப்பளித்தார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web