செம!! பிகில் பட நடிகை வெட்டிங் போட்டோ ஷூட்!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
காயத்ரி ரெட்டி

தமிழ் திரையுலகில் முண்ணனி நட்சத்திர கதாநாயகனாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவருடைய பிகில் படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. 

காயத்ரி ரெட்டி

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ‘பிகில்‘ திரைப்படத்தில் நடித்த நடிகை காயத்ரி ரெட்டி தனது காதலனை மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து திரையுலகினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காயத்ரி ரெட்டி

பிகில் படத்தில்  வரும் கால்பந்தாட்ட பெண்கள் அணியில் வீராங்கனையாக நடித்தவர் நடிகை காயத்ரி ரெட்டி. இவருடன் சேர்ந்து நடிகைகள் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ராஜ், இந்திரஜா, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்து அசத்தியிருப்பார்கள்.

பிகிலை தொடர்ந்து இந்த நடிகைகள் பல திரைப்படங்களில் நடித்தும், ரியாலிட்டி ஷோக்களிலும் வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில் நடிகை காயத்ரி ரெட்டி தனது கடந்த ஏப்ரல் மாதம் தனது காதலருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

காயத்ரி ரெட்டி

அதைத்தொடர்ந்து தற்போது தனது கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்கிறேன் என்று எளிமையாக முடிந்த திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து திரையுலகினர் காயத்ரி ரெட்டிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ ரியாலிட்டி ஷோவில் நடிகை காயத்ரி ரெட்டி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web