இந்தியன் 2 இசை விழாவில் கலந்துக்க மாட்டேன்... ரஜினி சொன்ன சூப்பர் தகவல்!
அதோ... இதோ... என்று பெரும் போராட்டத்திற்கு பிறகு ‘இந்தியன் 2’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர்கள் நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா, மாரிமுத்து என்று அடுத்தடுத்து மரணமடைந்தார்கள். இவர்களுக்கு முன்பாக படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உதவி இயக்குநர் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கிரேன் விழுந்து உயிரிழந்தார்.
இத்தனைப் பிரச்சினைகளுக்குப் பிறகு இசை வெளியீட்டு விழாவுக்கு தயாராகி இருக்கிறது இந்தியன் - 2.
படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து விவேக், மனோபாலா, சித்தார்த், நெடுமுடி வேணு, மாரிமுத்து, காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு இயக்குநர் ஷங்கர்அழைப்பு விடுத்துள்ளார்.ஆனால், தான் இந்தியன் - 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று கூறிய ரஜினி, "இந்தியன் - 2 நடிகர் கமல்ஹாசனின் படம். அவரின் மிகப்பெரிய உழைப்பு. கமல்ஹாசன் ரசிகர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். இந்நிலையில் நான் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்து கமல்ஹாசன் பற்றி எதையாவது பேசுவேன். அதை ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு கிண்டலாக கமெண்ட் செய்தால் எனக்கு சங்கடமாக மாறும். கமல்ஹாசனுக்கு அது சங்கடத்தை தரும். எனவே நான் வரமாட்டேன்" என்று கூறி தவிர்த்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை இசை வெளியீட்டு விழாவுக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னர் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் பட இசை வெளியீட்டு விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
