சாம்பார் சாதத்தில் கம்பளி பூச்சி... அதிர்ச்சி வீடியோ!

 
சாம்பார் சாதத்தில் கம்பளி பூச்சி

 உணவுப்பொருட்கள் தயாரிப்பில் அலட்சியம் அதிகரித்து வருவதால் பல நேரங்களில் நாம் சாப்பிடும் உணவே நஞ்சாகி விடுகிறது. இது குறித்த பல்வேறு விழிப்புணர்வு உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த போதிலும் தொடர்கதையாகி வருவது நுகர்வோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை மாதவரம் மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் செங்குன்றத்தில் வசித்து வரும்  ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நந்தகுமார்  சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.


பாதி சாப்பிட்ட நிலையில் சாதத்தில் கம்பளி பூச்சி கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த உணவகம் மேலாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் அலட்சியமாக  கம்பளி பூச்சி இல்லை, ஒரு காய்கறி வகை தான் என வாதம் செய்துள்ளார். காய்கறிக்கும் கம்பளி பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா எனக் கேட்டு வாடிக்கையாளருக்கும், உணவக உரிமையாளருக்கும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web