அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகள் நிறைவு... சசிகலா பேச்சு !

 
சசிகலா

 தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் முழுவதும் விரைவில்  மேற்கொள்ள இருக்கிறேன்.

சசிகலா

இதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம் தொடங்கப்படும்.  ஜெயலலிதா ஆட்சியில்  அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். ஒரு பெண் முதல்வர்  என்பதால் விமர்சனங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.  

சசிகலா

இன்று அனைவருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படம் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்.  ஜெயலலிதா தமது ஆட்சி காலத்தில் மக்கள் பிரச்னைக்கு உடனடியாக விரைந்து தீர்வு கண்டார். தமிழக காவல்துறை தற்போது சரியாக செயல்படவில்லை” எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web