மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்து ஊழியர் உயிரிழப்பு!

 
காற்றாலை மின் உற்பத்தி

தூத்துக்குடி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2வது அலகில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 10 நாள்களாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இதில் ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், நேற்று பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, மத்திய பிரதேச மாநிலம், அனூப்பூர் பீடு பகுதியைச் சேர்ந்த ராஜூபிரசாத் (44), பீஸ்கம் சிங் ரத்தோர் (36) ஆகியோர் எதிர்பாராத விதமாக பாய்லரில் தவறி விழுந்தனர்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த பிள்ளைகள்! விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

இருவரையும் மீட்ட சக ஊழியர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில்,ராஜூ பிரசாத் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பீஸ்கம் சிங் ரத்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?