பயங்கரம்... மண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக் கொலை... !!

 
அனிதா

 திருநெல்வேலி  மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், மேல்கரை வடக்கு தெருவில் வசித்து வருபவர்   கனகராஜ். இவரது  மனைவி சந்திரலேகா. கனகராஜின் தம்பி முத்துக்குமார், கோவையில்  பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் முத்துக்குமார், அதே பகுதியில் வசித்து வரும்  நாராயணபெருமாள் மகள் அனிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால் அவரது வீட்டில் இருந்து நகைகள் எதுவுமே போடப்படவில்லை.   அதனால், ‘நகைகள் போடும்படி நாராயணபெருமாளிடம் கனகராஜ் கூறி வந்துள்ளார்.  

அனிதா

எப்போது நகை போடுவீர்கள் என அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.  இந்த  தகராறு தினசரி தொடர்கதையானது. இதனால்  ஆத்திரத்தில்  நாராயணபெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார். இதனால் கோபமடைந்த கனகராஜ் கற்களை எடுத்து நாராயணபெருமாள் வீட்டின் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அதே நேரத்தில் அவரது இருசக்கர வாகனத்தையும்  அடித்து நொறுக்கியுள்ளார்.

ஆம்புலன்ஸ்


இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதற்கிடையே இரவில் மீண்டும் கனகராஜிக்கும், நாராயணபெருமாளுக்கும் தகராறு ஏற்பட்டது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதும் நகை போடாதது பற்றி கனகராஜ் சொல்லி காட்டினார்.  ஆத்திரம் தாங்காத நாராயணபெருமாள், வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து வந்து கனகராஜை சரமாரியாக வெட்டிவிட்டார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த  கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து  பரிதாபமாக உயிரிழந்தார்.   இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web