உலக சாதனை..!! ஒரே நேரத்தில் 2,143 ஜோடிகளுக்கு திருமணம்!!

 
இளம்தம்பதி

ராஜஸ்தான்மாநிலத்தில் மகாவீர் கோஷாலா கல்யான் சன்ஸ்தான் என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனம் பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அதனொன்றாக அங்குள்ள பரன் நகரில் 2,143 இளம்ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். 

இந்த திருமண நிகழ்வில் இந்து, முஸ்லீம் உள்ளிட்ட பல்வேறு மதத்தினை சேர்ந்த ஜோடிகளும் பங்கேற்று திருமணம் செய்துக்கொண்டனர். கடந்த மே மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தில் பங்கேற்ற மணமக்கள் உற்சாகமாக மாலை மாற்றி தங்கள் வழக்கப்படி புரோகிதர்கள் அல்லது மத குருமார்களை வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இளம்தம்பதி

இந்த திருமணத்தையொட்டி இளம்தம்பதிகளுக்கு பல்வேறு சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும் திருமண மேடையிலேயே அரசு அதிகாரிகள் மூலம் திருமண சான்றிதழை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இளம் தம்பதிகளுக்கு நகைகள், கட்டில், பாத்திரம், பிரிட்ஜ் இண்டக்சன் குக்கர் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சீர்வரிசை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி எவ்வித குறைபாடும் இல்லாமல், திருமண விழாவில் பங்கேற்ற தம்பதிகள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பு, காரம் என பல்வேறு வகையான உணவு வகைகள் தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது.

இளம்தம்பதி

இந்த திருமண நிகழ்வு உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதாவது, உலகிலேயே ஒரே நேரத்தில் அதிக திருமணம் நடந்த நிகழ்வு என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த திருமண நிகழ்வு இடம் பெற்றுள்ளது. முன்னதாக ஏமன் நாட்டில் கடந்த 2013 ஆண்டு ஒரே நேரத்தில் 963 தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருந்த சாதனை நடைபெற்றது. தற்போது இந்த சாதனை தகர்க்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web