இந்தியா பாகிஸ்தான் மோதல் எப்போது? உலகக்கோப்பை போட்டிகள் அட்டவணை வெளியீடு!!

 
உலகக்கோப்பை

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அட்டவணையை பிசிசிஐ தயாரித்து ஐசிசியிடம் கொடுத்திருப்பதாகவும், விரைவில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தேதிகளை முடிவு செய்யும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்தியா அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவில் எதிர்கொள்ளும்.    உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இறுதிப்போட்டி, அரையிறுதி போட்டிக்கான மைதானங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும், இந்த போட்டிகள் முறையே நவம்பர் 15, 16 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக்கோப்பை

13வது ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று இறுதி செய்கிறது.

 

 

இந்நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை ஐசிசி-யிடம் பகிர்ந்துள்ளது. இதனை ஐசிசி, தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் கருத்து கேட்பதற்காக அனுப்பி வைத்துள்ளது.வரைவு அட்டவணைப்படி அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

தொடர்ந்து 11-ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் டெல்லியிலும், 15-ம் தேதி பாகிஸ்தானுடன் அகமதாபாத்திலும், 19-ம் தேதி வங்கதேசத்துடன் புனேவிலும், 22-ம் தேதி நியூஸிலாந்துடன் தரம்சாலாவிலும், 29-ம் தேதி இங்கிலாந்துடன் லக்னோவிலும், நவம்பர் 2-ம் தேதி தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மும்பையிலும், நவ.5-ம்தேதி தென் ஆப்பிரிக்காவுடன் கொல்கத்தாவிலும், நவ.11-ம் தேதி தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் பெங்களூருவிலும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

உலகக்கோப்பை

ஐசிசி உலககோப்பை 2023 தொடர்   இந்திய அணியின் உத்தேச அட்டவணை 


அக்டோபர் 8 : இந்தியா – ஆஸ்திரேலியா, சென்னை 
அக்டோபர் 11 : இந்தியா – ஆப்கானிஸ்தான், டெல்லி 
அக்டோபர் 15 : இந்தியா – பாகிஸ்தான், அகமதாபாத் 
அக்டோபர் 19 : இந்தியா – வங்கதேசம், புனே 
அக்டோபர் 22 : இந்தியா – நியூசிலாந்து, தரம்சாலா 
அக்டோபர் 29 : இந்தியா – இங்கிலாந்து, லக்னோ 
நவம்பர் 2 : இந்தியா – குவாலிஃபயர் சுற்றில் வெல்லும் அணி 
நவம்பர் 5 : இந்தியா – தென்னாபிரிக்கா, கொல்கத்தா 
நவம்பர் 11 : இந்தியா – குவாலிபயர் சுற்றில் வெல்லும் அணி, பெங்களூரு

அரை இறுதி ஆட்டங்கள் நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடத்தப்படும் என தெரிகிறது. இந்த இரு ஆட்டங்களும் நடத்தும் மைதானம் முடிவாகவில்லை. இறுதிப் போட்டி 19-ம் தேதி அகமதாபாத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web